ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் 'செல்லோ ஷோ' படத்தில் நடித்த சிறுவன் மரணம்


ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் செல்லோ ஷோ படத்தில் நடித்த சிறுவன் மரணம்
x

ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் ‘செல்லோ ஷோ' படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி உயிரிழந்தார்.

ஆமதாபாத்,

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ராகுல் கோலிக்கு லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 15.

ராகுல் கோலி மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் கோலி நடித்துள்ள செல்லோ ஷோ படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் வெளியாகும் முன்பே ராகுல் கோலி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லோ ஷோ படத்தை 14-ந்தேதி தியேட்டரில் பார்த்த பிறகே ராகுலுக்கு இறுதி சடங்கை செய்வோம் என்று அவரது தந்தை கண்ணீரோடு கூறினார்.

1 More update

Next Story