டெல்லியில் தொடரும் கனமழை; வாகன ஓட்டிகள் அவதி
தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம், அரியானா மாநில எல்லைகளில் அமைந்துள்ள குருகிராம், நொய்டா நகரங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குருகிராம், நெய்டா, டெல்லியின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதனால், அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேவேளை, கனமழை காரணமாக குருகிராம், நொய்டாவில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story