இமாச்சலில் கனமழை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!
இமாச்சலப் பிரதேசத்தில் ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
சிம்லா,
இமாச்சலப் பிரதேசத்தில் ஒருசில பகுதிகளில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. சிம்லா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்னல், இடி மற்றும் மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மண்டியில் 17 மிமீ மழையும், காங்க்ராவில் 13 மிமீ மழையும், கல்பாவில் லேசான மழையும் பெய்தது.
சம்பா, காங்க்ரா, சிம்லா, குலு, மண்டி, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆலங்கட்டி மழையை எதிர்கொள்ளும் வகையில், பயிர்களுக்கு மேல் வலைகளை பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை 10 மாவட்டங்களில் இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கான 'ஆரஞ்சு' அலர்ட்டை உள்ளூர் வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது.
Related Tags :
Next Story