ராஜஸ்தானில் 2 வாகனங்கள் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் 2 வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சதுல்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நேற்று அதிகாலை 1 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலை 52-க்கு அருகில் அமைந்துள்ள ரத்தன்பூர் கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஹிசாரில் உள்ள சஹாரா கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விமலா (63), கிருஷ்ணா (60), சரஸ்வதி (5), அங்கித் (8), மற்றும் அஞ்சலி (5) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் சலசர் தாமுக்குச் சென்றுவிட்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் ஹிசாருக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story