ராஜஸ்தான்: வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - ஊழியர் படுகாயம்


ராஜஸ்தான்: வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - ஊழியர் படுகாயம்
x

Image Courtesy : PTI

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், கொள்ளையர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜோத்வாரா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், இன்று காலை முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது கொள்ளையர்களிடம் வங்கியின் கேஷியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை துப்பாகியால் சுட்டனர். இந்த சம்பவத்தின்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், கொள்ளையர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தார். மற்றொரு நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வங்கி ஊழியர் நரேந்திர சிங் ஷெகாவத், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்களில் ஒருவரான பாரத் சிங் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மனோஜ் மீனா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story