காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பு: கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.


காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பு: கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.
x

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ. அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. ஒரு இடத்தை பாஜக வென்றுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா கட்சி மாறி, காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு வாக்களித்ததையடுத்து, அவர் பாஜக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கடாரியா பிறப்பித்துள்ள உத்தரவில், கொறடா உத்தரவையும் மீறி ஷோபாராணி குஷ்வா, திவாரிக்கு வாக்களித்துள்ளார். எனவே, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார். கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story