ராஜஸ்தான்: டெல்லியில் போட்டி தோ்விற்கு தயாராகும் மாணவா்களுக்கு தங்கும் விடுதி


ராஜஸ்தான்: டெல்லியில் போட்டி தோ்விற்கு தயாராகும் மாணவா்களுக்கு தங்கும் விடுதி
x

போட்டி தோ்விற்கு தயாராகும் மாணவா்கள் தங்குவதற்காக டெல்லியில் ராஜஸ்தான் அரசு விடுதி கட்ட உள்ளது.

உதய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த மாணவா்கள் பலா் டெல்லியில் தங்கி படித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனா். அவா்களின் வசதிக்காக மாநில அரசு விடுதி கட்ட முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள உதய்பூர் மாளிகையில் 250 அறைகள் கொண்ட இளைஞர் விடுதியை ராஜஸ்தான் அரசு கட்ட உள்ளது. சுமார் 330 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விடுதி, டெல்லியில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ராஜஸ்தான் மாநில ஏழை மாணவர்களுக்காக இருக்கும். இதற்கான முன்மொழிவுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், உதய்பூர் இல்லத்தில் நேரு இளைஞர் விடுதி மற்றும் வசதி மையம் கட்டப்படும். முன்மொழியப்பட்ட விடுதியில் 500 மாணவர்கள் தங்குவதற்கான வசதி இருக்கும். கடந்த 2022-23 மாநில பட்ஜெட்டில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story