நாட்டில் உள்ள பெண்களை வலுப்படுத்த கூடிய பணிகளை செய்தவர் ராஜீவ் காந்தி: சோனியா காந்தி புகழாரம்


நாட்டில் உள்ள பெண்களை வலுப்படுத்த கூடிய பணிகளை செய்தவர் ராஜீவ் காந்தி:  சோனியா காந்தி புகழாரம்
x

நாட்டில் உள்ள பெண்களை வலுப்படுத்த கூடிய பணிகளை எப்போதும் செய்து வந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை முன்னிட்டு டெல்லியில் 25-வது ராஜீவ் காந்தி தேசிய சத்பாவன விருது நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரசின் நாடாளுமன்ற கட்சி தலைவரான சோனியா காந்தி பேசும்போது, நாட்டில் உள்ள பெண்களை வலுப்படுத்த கூடிய பணிகளை எப்போதும் செய்து வந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.

பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளை உறுதிப்படுத்தியவர். ஊரக மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 லட்சம் மகளிர் பிரதிநிதிகள் இன்று இருக்கிறார்கள் என்றால், அதற்கு ராஜீவ் காந்தியின் கடுமையான உழைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை மட்டுமே காரணம் என பேசியுள்ளார்.


Next Story