சோனியா குறித்து நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துகள் நீக்கம் - வெங்கையா நாயுடு நடவடிக்கை


சோனியா குறித்து நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துகள் நீக்கம் - வெங்கையா நாயுடு நடவடிக்கை
x

மாநிலங்களவையில் சோனியா குறித்து நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துகளை வெங்கையா நாயுடு நீக்கம் செய்தார்.

புதுடெல்லி,

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் பேசியிருந்த விவகாரத்தில் கடந்த வாரம் மாநிலங் களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரை விமர்சிப்பது மாநிலங்களவை மரபுக்கு எதிரானது எனக்கூறிய எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கருத்துகளை நீக்க வேண்டும் என அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரத்தில் நேற்று மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் போன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஆகியோரை அழைத்து வெங்கையா நாயுடு விவாதித்தார்.

பின்னர் சோனியா குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து அவர் நீக்கினார். இந்த தகவலை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டது.


Next Story