கண்களை சிமிட்டி, புன்னகைக்கும் பால ராமர்: இணையத்தில் பரவும் ஏஐ வீடியோ


கண்களை சிமிட்டி, புன்னகைக்கும் பால ராமர்: இணையத்தில் பரவும் ஏஐ வீடியோ
x

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அயோத்தி பாலராமர் சிலை கண் சிமிட்டி, தலையசைத்து புன்னகைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அயோத்தி,

பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பால ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிரதமர் மோடி, "இந்தியாவின் ஒற்றுமை, அமைதியின் அடையாளம் அயோத்தி கோவில்" என்று பேசினார்.

அயோத்தி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் வாசலில் தீபம் ஏற்றி கொண்டாடினர். மேலும் கடவுள் பாலராமர் புகைப்படங்கள் தங்க, வைர ஆபரணங்களுடன் ஜொலிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் நேற்று அலங்கார தோற்றத்தில் அருள்பாலித்த பகவான் பாலராமர் சிலை கண்களை சிமிட்டி, தலையை அசைத்து காண்போரை நோக்கி புன்னகைப்பது போன்ற வசீகர வீடியோ, இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.


Next Story