அயோத்தி ராமர் கோவில் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும்- யோகி ஆதித்யநாத்


அயோத்தி ராமர் கோவில் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும்- யோகி ஆதித்யநாத்
x

ANI

அயோத்தி ராமர் கோவில் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும் என கருவறைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.

அயோத்தியா

சுப்ரீம் கோர்ட் ராமர்கோவில் தொடர்பான நீண்டகால மத சர்ச்சையை நவம்பர் 2019 இல், தீர்த்து வைத்தது. நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறியது.கோவில் கட்டுமானத்தை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையை அமைக்குமாறு மத்திய அரசிடம் கூறப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், அதே ஊரில் ஒரு புதிய மசூதிக்கு 'முக்கிய இடம்' ஒதுக்கப்படும் என்றும் கூறியது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2020 இல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். வேலை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது

இன்று கோவில் கருவறைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

உத்தரப் பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கோயிலின் கருவறைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலது கொண்டு பேசும் போது கூறியதாவது:-

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இந்தியாவின் தேசியக் கோயிலாக இருக்கும். ராமர் கோவில் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும்.இந்த நாளுக்காக மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என கூறினார்.

நிகழ்ச்சியில் உத்தரபிரதேச துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் ராமர் கோவில் இயக்கத்துடன் தொடர்புடைய சுமார் 90 மடங்கள் மற்றும் கோவில்களைச் சேர்ந்த துறவிகளும் கலந்து கொண்டனர்.

கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உள்பட மூன்று அடுக்குகளைக் கொண்ட கோவிலின் கட்டுமானம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

2023 டிசம்பரில் சிலை நிறுவப்படும் கருவறை தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 17,000 கற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கோவிலின் அமைப்பிற்காக, ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரில் இருந்து கல் வாங்கப்படுகிறது.




Next Story