ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா அறிவிப்பு


ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா அறிவிப்பு
x

ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்படுகிறார் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் ரா எனப்படும் உளவு அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்படுவதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு வழங்கி உள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் அமைச்சரவை செயலகத்திற்கான தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது பதவி நியமன அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

ரா அமைப்பின் செயலாளர் பதவியை வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவி காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் நிறைவடையும் சூழலில், இந்த நியமனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, சின்ஹா 2 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை என இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் தொடருவார். இதனை அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு செயலாளர் தீப்தி உமாசங்கர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story