காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை


காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
x
தினத்தந்தி 11 Oct 2023 11:10 AM GMT (Updated: 11 Oct 2023 11:19 AM GMT)

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது . காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர் . இதில் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைதத்து.

இந்த நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது .

தமிழ்நாட்டுக்கு வரும்16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது .


Next Story