குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: குண்டு பாய்ந்து உறவினர் பலி


குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: குண்டு பாய்ந்து உறவினர் பலி
x

குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியபோது குண்டு பாய்ந்து உறவினர் உயிரிழந்தார்.

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஜஹாங்கீர்பூர் பகுதியை சேர்ந்த நபரின் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரேம்பால் ரானா (வயது 35) என்ற உறவினர் வந்திருந்தார். குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது மற்றொரு உறவினரான ரோகித் சிங் என்பவர் கொண்டுவந்த துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி கொண்டு ரானா மீது பாய்ந்தது. இந்த சம்பவத்தில் ரானா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், ரானாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story