மாணவி குடும்பத்துக்கு நிவாரணமாக ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம்


மாணவி குடும்பத்துக்கு நிவாரணமாக ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரணமாக ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் வழங்கப்படுகிறது.

பெங்களூரு:


பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஷில்பா என்ற மாணவி பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றபடி பஸ் ஏறுவதற்கு முயன்றார். அப்போது பஸ்சில் இருந்து தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பஸ் ஏறி, இறங்கியது.இதில் படுகாயம் அடைந்த மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1½ கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி சக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவியின் சகோதரி இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிப்பதற்கு தேவையான வசதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் இலவசமாக செய்து கொடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story