ராமாயண கால ஸ்தலங்களில் ஆய்வு செய்த பிரபல தொல்லியல் நிபுணர் மறைவு; பிரதமர் இரங்கல்


ராமாயண கால ஸ்தலங்களில் ஆய்வு செய்த பிரபல தொல்லியல் நிபுணர் மறைவு; பிரதமர் இரங்கல்
x

ராமாயண கால ஸ்தலங்களில் தொல்லியல் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் நிபுணர் பிராஜ் பாசி லால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,



தொல்லியல் துறையில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் நிபுணர் பிராஜ் பாசி லால். தொல்லியல் துறையில் அவர் ஆற்றிய பணிகளுக்காக நாட்டின் உயரிய பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்ட டுவிட்டர் செய்தியில், திரு.பி.பி. லால் அவர்கள் தனித்துவம் வாய்ந்தவர். கலாசாரம் மற்றும் தொல்லியல் துறைக்கு அவர் ஆற்றிய பங்கு ஈடு இணையில்லாதது.

வளம் நிறைந்த கடந்த காலத்துடன் நம்மை ஆழ்ந்த பிணைப்பு ஏற்படுத்திய ஒரு சிறந்த ஆழ்ந்த சிந்தனையாளராக நினைவுகூரப்படுபவர். அவரது மறைவு வேதனை ஏற்படுத்தி உள்ளது. அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் நினைவுகளுடன் ஒன்றியிருக்கிறேன். ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார்.

ராமாயண கால ஸ்தலங்களில் தொல்லியல் ஆய்வு பணிகளை மேற்கொண்டவர் என்ற பெருமையை பெற்றவர் பிராஜ் பாசி லால் ஆவார்.


Next Story