குடியரசு தின விழா; டெல்லியில் பிப்ரவரி 15-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை


குடியரசு தின விழா; டெல்லியில் பிப்ரவரி 15-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
x

டெல்லி வான்பரப்பில் அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

குடியரசு தின விழா நெருங்கி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் பிப்ரவரி 15-ந்தேதி வரை அமலில் இருக்கும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story