புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு


புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:49 PM IST (Updated: 9 Feb 2023 2:02 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனியார் புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

இந்த நிலையில் ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கைகளும் தொடரப்பட்டன. இதற்கு எதிராக ஐகோர்ட்டில் வேறு சில வழக்குகளும் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா வரவில்லை. அவசர நிலை கருதி இது போன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. இதனால் புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story