பெண்ணை மிரட்டி ரூ.12 லட்சம் பறிப்பு


பெண்ணை மிரட்டி ரூ.12 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை மிரட்டி ரூ.12 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு பனசங்கரியில் 31 வயது பெண் வசிக்கிறார். இவரது வாட்ஸ்-அப்புக்கு ஒரு மர்மநபர் வீடியோ அழைப்பு மூலமாக பேசினார். அப்போது பெண்ணின் புகைப்படத்தை மர்மநபர் படம் பிடித்து கொண்டார். அந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அந்த பெண்ணை மர்மநபர் மிரட்டினார். பின்னர் மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.12 லட்சத்தை அந்த பெண் அனுப்பி வைத்தார். மறுபடியும் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாலும், ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியதாலும், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.


Next Story