பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.40 லட்சம் கொள்ளை: துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அட்டகாசம்


பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.40 லட்சம் கொள்ளை: துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அட்டகாசம்
x

கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பதேகார் சாகிப்,

பஞ்சாப் மாநிலத்தின் பதேகார் சாகிப் மாவட்டத்தில் உள்ளது பத்மஜ்ரா கிராமம். இங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் அர்மீத் சிங் என்ற ஊழியர், பங்கில் சேகரமான ரூ.40 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நேற்று பகலில் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய ஒரு காவலாளியும் அனுப்பப்பட்டார்.

"அவர்கள் சென்ற காரை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்ததாகவும், கொள்ளையர்கள் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாகவும், அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டியபடி தன்னிடம் இருந்த பணப்பையை பிடுங்கிச் சென்றுவிட்டதாகவும்" அர்மீத் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர், கொள்ளையர்களை தேடும் பணியில் இறங்கினர்.


Next Story