பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் 'ரோபோ'க்கள்


பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோக்கள்
x

பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளுக்கு ரோபோக்கள் உதவி வருகின்றன.

பெங்களூரு:

நாட்டில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் கெம்பேகவுடா பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் ஒன்று. அங்கு தினமும் அதிக எண்ணிக்கையில் விமானங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பலருக்கு, விமானம் ஏற எந்த வழியாக செல்வது, குடிநீர், கழிவறை, சரக்கு வைக்கும் இடம் போன்ற விஷயங்கள் தெரிவது இல்லை. ஆங்காங்கே தகவல் பலகை வைத்திருந்தாலும் பயணிகள் சிலர் குழப்பம் அடைகிறார்கள்.

இதையடுத்து பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் அந்த விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த விமான நிலைய அதிகாரி கூறுகையில், "பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் பரிசோதனை அடிப்படையில் 10 ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். பயணிகள் தங்களுக்கு எழும் கேள்விகளை அந்த ரோபோக்களிடம் கேட்டால் அவை பதிலளிக்கும். இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த பணியில் ரோபோக்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம்" என்றார்.


Next Story