விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல்; பட்கல்லை சேர்ந்தவர் கைது
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பட்கல்லை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பட்கல்லை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
364 கிராம் தங்கம் பறிமுதல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருேக பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதனை சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி பறிமுதல் செய்யும் சம்பவமும் ெதாடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று பஜ்பே விமான நிலையத்தில் துபாயில் இருந்து தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகள், அவரது உடைமைகளில் சுங்க வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அதேவிமானத்தில் வந்த நபரின் நடவடிக்கையில் சுங்கவரித்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரிடம் சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர், உடைமைகளில் பெண்ணின் உள்ளாடை பாக்கெட்டிற்குள் பசை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 364 கிராம் எடைகொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.19 லட்சம் இருக்கும்.
கைது
விசாரணையில் அவர், உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் டவுனை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர், பஜ்பே போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரை, போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.