சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இமாசலபிரதேசத்தில் காரில் ரூ.2 கோடி பறிமுதல்

இமாசலபிரதேசத்தில் காரில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிம்லா,
இமாசலபிரதேசத்தில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பண நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் பணியாற்றி வருகின்றன. கங்க்ரா மாவட்ட நுழைவாயிலில் டம்டால் என்ற இடத்தில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், ரூ.2 கோடி ரொக்கம் இருந்தது. அந்த கார், சத்தீஷ்கார் மாநில பதிவெண் கொண்டது. காரில் 2 பேர் இருந்தனர்.
பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அப்பணம் எங்கிருந்து வந்தது? எங்கு செல்கிறது? சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலத்தில் என்ன காரணத்துக்காக பணம் கொண்டு வரப்பட்டது? என்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story