ரூபி மனோகரன் விவகாரம்: காங்கிரஸ் பொதுச்செயலாளரிடம் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி நேரில் விளக்கம்


ரூபி மனோகரன் விவகாரம்: காங்கிரஸ் பொதுச்செயலாளரிடம் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி நேரில் விளக்கம்
x

ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அது ரத்து செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம் கேட்டுள்ளார்.

புதுடெல்லி,

தமிழக காங்கிரசில் கடந்த 15-ந் தேதி ஏற்பட்ட கோஷ்டி மோதல், நீறு பூத்த நெருப்பாக இன்னும் புகைந்துகொண்டே இருக்கிறது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக வெகுண்டு எழுந்த நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மாநில தலைமைக்கு சவாலாக இருக்கிறார்.

அவருக்கு மூத்த தலைவர்கள் சிலர் ஆதரவாக இருக்கிறார்கள். இதனால்தான் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ரூபி மனோகரனை நீக்கம் செய்த நிலையில், தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் அந்த நீக்கத்தை ரத்து செய்தார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து உள்ளனர்.

ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அது ரத்து செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை பற்றி இவர்களிடம் கே.சி.வேணுகோபால் விளக்கம் கேட்டுள்ளார். இதுபற்றி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் கே.சி.வேணுகோபால் அறிக்கை அளித்துள்ளதாக தெரிகிறது.


Next Story