ரஷிய அதிபர் தேர்தல்; 5-வது முறையாக வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


ரஷிய அதிபர் தேர்தல்; 5-வது முறையாக வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

ரஷிய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

ரஷிய அதிபருக்கான தேர்தலில், விளாடிமிர் புதின் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதனை மாஸ்கோவில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தேர்தல் நடைமுறை பற்றி சில மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ரஷிய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியா மற்றும் ரஷியா இடையேயான சோதனையான காலத்தில், சிறந்த மற்றும் தனியுரிமை பெற்ற ராஜதந்திர நட்புறவை இன்னும் வலுப்படுத்த, வருகிற ஆண்டுகளில் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

அதிபர் தேர்தல் முறைகேடு பற்றி கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகத்திற்கு இன்று அளித்த பேட்டியில், எங்களுடைய நாட்டின் தேர்தல்களில் சட்டவிரோதம் பற்றி நாங்கள் பேசினால், மக்கள் தொகையில் 87 சதவீதம் கொண்டவர்கள், அதிபர் புதினுக்கு வாக்களித்த சட்டவிரோதம் பற்றியும் கூட பேசலாம். இது முற்றிலும் அபத்தம் என்று கூறினார்.


Next Story