"சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது" - தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்


சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது - தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்
x

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடைதிறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக ஹெலி கேரளா என்ற நிறுவனம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தது. கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் விஐபி தரிசனம் செய்வது வரை அனைத்துக்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விளம்பரத்தைக் கண்ட கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேவசம் போர்டின் அனுமதியின்றி சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை விளம்பரம் செய்த தனியார் நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியது. இதையடுத்து அந்த விளம்பரத்தை நிறுத்தி விட்டதாக நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Next Story