சபரிமலை: தமிழக அய்யப்ப பக்தர்கள் திடீர் போராட்டம்


சபரிமலை: தமிழக அய்யப்ப பக்தர்கள் திடீர் போராட்டம்
x

கோப்புப்படம்

பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் எருமேலியில் தமிழக அய்யப்ப பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம்,

மகரஜோதி தரிசனத்தை காண சபரிமலை பகுதியில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதற்கிடையே நேற்று காலை முதல் எருமேலியில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் சபரிமலைக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர். போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் பாதி வழியில் தமிழக, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் எருமேலியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

நெரிசல் குறைந்த பிறகு அனைவரையும் அனுப்பி வைப்பதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து பக்தர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story