சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை


சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை
x

கோப்புப்படம் 

விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஷ் தபன் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக சோனு குமார், பிஷ்னோய், அனுஜ் தபன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மும்பை சிறப்புப் பிரிவு போலீசாரின் விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஷ் தபன் (23 வயது) தற்கொலை செய்து கொண்டார். அவர் லாக்-அப்பின் கழிவறையில் பெட்ஷீட்டைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையின்போது, அனுஜ் தபன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story
  • chat