ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் "சமுத்ராயன் திட்டம்" 2026-ல் நிறைவுபெறும் - மத்திய அரசு


ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும்  சமுத்ராயன் திட்டம்  2026-ல் நிறைவுபெறும் - மத்திய அரசு
x

6,000 மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ல் நிறைவுபெறும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சமுத்ராயன் திட்டத்திற்கான வாகனங்களை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. சமுத்ரயான் திட்டமானது, ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளிஉலகுக்குத் தெரியாததை வெளியே கொண்டு வர, மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள நீரில் மூழ்கக்கூடிய வாகனத்தை அனுப்புகிறது. இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சமுத்ரயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலுக்குள் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய உதவும் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உணர்திறன் தன்மை கொண்ட கருவிகளுடன் மூன்று பேர் கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்துக்குள் சென்று ஆய்வு நடத்துவார்கள்.

இந்தநிலையில் 6,000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் 2026-ல் நிறைவு பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்கடல் ஆய்வுக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் என்பது 2020 - 2021 முதல் 2025 - 2026 வரையாகும். மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருக்கும் இந்தியா, கடற்கரையோரம் 9 மாநிலங்களையும் 1,382 தீவுகளையும் கொண்டிருக்கிறது.

சமுத்ராயன் திட்டம் அமல்படுத்துவதன் மூலம் கடலடி ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப்பெற்றுள்ள அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story