சங்கெத் சர்கரின் கடின உழைப்பு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது - ஜனாதிபதி திரவுபதி முர்மு


சங்கெத் சர்கரின் கடின உழைப்பு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 30 July 2022 1:00 PM GMT (Updated: 30 July 2022 2:10 PM GMT)

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கெத் சர்கருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்கர் பங்கேற்றார்.

55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ தூக்கி தங்கம் வென்றார், இலங்கையின் திலங்க இசுரு குமார 225 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சங்கெத் மகாதேவ் சர்கருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சங்கெத் சர்கருக்கு வாழ்த்துகள்.

உங்களுடைய மகத்தான கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியையும், இந்தியாவுக்கு பெருமையையும் கொண்டு வந்துள்ளது. இந்தியா பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.



Next Story