சமூக வலைதளங்களில் வைரலான சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை: பிரதமர் மோடி பாராட்டு


சமூக வலைதளங்களில் வைரலான சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை:  பிரதமர் மோடி பாராட்டு
x

சமூக வலைதளங்களில் வைரலான சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கிரிக்கெட் நம் நாட்டில் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரையும் இணைத்திருக்கும் ஒரு உணர்ச்சி. இது நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். விளையாட்டு ஒவ்வொரு வயதினரும் வெவ்வேறு இடங்களில் ரசிக்கப்படுகிறது, அவர்களின் சொந்த விதிகளுடன் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது.

இந்த சூழலில் சில சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பழமையான, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியில் வர்ணனை செய்யப்பட்ட கிரிக்கெட் வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். பெங்களூருவில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் வீதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிரிக்கெட் விளையாட்டை சிறுவன் ஒருவர் சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்கிறார். இந்த வீடியோவை "சமஸ்கிருதம் மற்றும் கிரிக்கெட்" என்று குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமி நாராயண பிஎஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். 45 விநாடி நேரமே வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

சமூக வலைதளங்களில் வைரலான சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனைக்கு பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இதைக் காண மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். இதேபோன்ற முயற்சி காசியில் கடந்த ஆண்டு நடைபெற்றபோது அதனை 'மன் கி பாத் நிகழ்ச்சி' ஒன்றில் பகிர்ந்துகொண்டேன். இதையும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.





Next Story