ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி வழக்கு - அடுத்த வாரம் விசாரணை


ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி வழக்கு - அடுத்த வாரம் விசாரணை
x

கோப்புப்படம்

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி வழக்கு, அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் மீண்டும் முறையிட்டார்.

வழக்குடன், ஏனைய இடைக்கால மனுக்களையும் சேர்த்து நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் சுப்பிரமணியசாமி முறையிட்டபோது, இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.


Next Story