சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - குலாம் நபி ஆசாத் அதிருப்தி


சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - குலாம் நபி ஆசாத் அதிருப்தி
x
தினத்தந்தி 11 Dec 2023 7:22 AM GMT (Updated: 11 Dec 2023 7:49 AM GMT)

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பின் சட்ட விதிகளை ஜனாதிபதி மத்திய அரசின் ஒப்புதலுடன் ஜம்மு காஷ்மீருக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும், மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.

இந்தநிலையில் இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி குலாம் நபி ஆசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த தீர்ப்பினால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடையவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.


Next Story