கிரேன் மீது ஆட்டோ மோதி கோர விபத்து - 7 பேர் பலி


கிரேன் மீது ஆட்டோ மோதி கோர விபத்து - 7 பேர் பலி
x

கிரேன் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் கன்கர்பக் பகுதியில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கட்டுமான பணிக்காக கிரேன் வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கட்டுமான பணிகள் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக வந்த ஆட்டோ நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story