மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ராணுவ அதிகாரி சஸ்பெண்டு


மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ராணுவ அதிகாரி சஸ்பெண்டு
x

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த மூத்த அதிகாரி சதீஷ் பிரசாத் என்பவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

புதுடெல்லி,

மணிப்பூரில் பெரும்பான்மை இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அங்கு துணை ராணுவ படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். இதுகுறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

சம்பவம் குறித்து அறிந்த எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த மூத்த அதிகாரி சதீஷ் பிரசாத் என்பவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் அவரை சஸ்பெண்டு செய்து எல்லை பாதுகாப்பு படை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story