தரமற்ற உணவு வழங்கியதாக கேட்டரிங் மேலாளரை தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ
ஹிங்கோலி தொகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் நேரில் சென்று சந்தோஷ் பாங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் ஏக்னாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சந்தோஷ் பாங்கர், தனது தொகுதியில் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியதாக கேட்டரிங்க் மேலாளரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.தனது சொந்த தொகுதியான ஹிங்கோலி தொகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் நேரில் சென்று சந்தோஷ் பாங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் ஒப்பந்த மேலாளரை நேரில் சென்று சந்தித்த சந்தோஷ் பாங்கர், உணவின் தரம் குறைந்தது குறித்து கேள்வி எழுப்பியதோடு, அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Related Tags :
Next Story