கட்சி சின்னத்தை முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே மனு: மும்பை ஐகோர்ட் தள்ளுபடி


கட்சி சின்னத்தை முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே  மனு: மும்பை ஐகோர்ட் தள்ளுபடி
x

கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே அணி மனு தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா செயல்பட்டு வருகிறது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என கூறி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் சின்னத்தையும் கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கும் இரு அணிகளுக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல் முறையீடு செய்தது. உத்தவ் தாக்கரே தரப்பின் இந்த மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story