குஜராத்தில் அதிர்ச்சி: மொபைல் கேம்ஸ் விளையாடிய 8 வயது சிறுமி, தாய் திட்டியதற்காக தூக்கு போட்டு தற்கொலை


குஜராத்தில் அதிர்ச்சி: மொபைல் கேம்ஸ் விளையாடிய 8 வயது சிறுமி, தாய் திட்டியதற்காக தூக்கு போட்டு தற்கொலை
x

குஜராத்தில் மொபைல் கேம்ஸ் விளையாடிய 8 வயது சிறுமி, தாய் திட்டியதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

ராஜ்கோட்,

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்த 8 வயது சிறுமி கோடை கால விடுமுறைக்காக, நவ்சாரி மாவட்டத்தில் சிக்லி பகுதியில் உள்ள தனது தாய் வழி தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளது.

அந்த சிறுமி விடுமுறை காலத்தில் மொபைல் போனில் பல மணிநேரம் கேம்ஸ் விளையாடி கொண்டு இருந்து உள்ளது என கூறப்படுகிறது. இதனை கவனித்த சிறுமியின் தாயார் கவலை அடைந்து உள்ளார்.

அவர் சிறுமியை திட்டி உள்ளார். இதனால், அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்து, சிக்லி காவல் நிலைய அதிகாரிகள் தாமாக முன்வந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சிறுவர், சிறுமிகள் நீண்டநேரம் மொபைல் போனின் திரையை பார்த்து கொண்டு இருப்பது மனம் மற்றும் உடல்நல சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 More update

Next Story