லைவ் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; பிரபல பாடகி காயம்


லைவ் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; பிரபல பாடகி காயம்
x

பீகாரில் லைவ் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரபல பாடகி ஒருவர் காயம் அடைந்து உள்ளார்.

பாட்னா,

பீகாரின் சரண் மாவட்டத்தில் கார் பசந்த் கிராமத்தில் வசித்து வருபவர் நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியாக இருந்து வருகிறார். நகரில் நடக்கும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி வருகிறார்.

இவர் பீகாரின் பாட்னா நகரில் நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஆடல், பாடலுடன் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதில், பலரும் மேடையை நோக்கி பணமழை பொழிந்தனர்.

அப்போது, திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில், அவரது இடது தொடையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வைரலாகி வருகிறது.

உடனடியாக அவரை மீட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் அவரது நிலைமை சீரடைந்து உள்ளது.

இதுபற்றி அவர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றியும், இதில் யார் ஈடுபட்டனர் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story