ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்க முடிவு; சித்தராமையா தகவல்


ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்க முடிவு; சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக பட்ஜெட் அளவு ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி ஆகும். இதில் வருவாய் வரவுகள் ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 410 கோடி. மூலதன வரவுகள் ரூ.250 கோடி, வருவாய் செலவுகள் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 933 கோடி, மூலதன செலவுகள் ரூ.54 ஆயிரத்து 374 கோடி, நடப்பாண்டில் ரூ.85 ஆயிரத்து 818 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை ரூ.66 ஆயிரத்து 646 கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ.12 ஆயிரத்து 523 கோடி. இந்த ஆண்டின் இறுதியில் கர்நாடகத்தின் கடன் ரூ.5 லட்சத்து 71 ஆயிரத்து 665 கோடியாக அதிகரிக்கும். கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.25 லட்சத்து 67 ஆயிரத்து 340 கோடியாக அதிகரிக்கும். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 2.60 சதவீதம் ஆகும். வருவாய் பற்றாக்குறை அரை சதவீதத்திற்கும் குறைவு. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் கர்நாடகத்தின் மொத்த கடன் நிலுவை 22.27 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

1 More update

Next Story