பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்; சித்தராமையா பேட்டி


பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்; சித்தராமையா பேட்டி
x

பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆதரவு அலை

காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவி குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தேன். முதல்-மந்திரி பதவிக்கு நானும், டி.கே.சிவக்குமாரும் போட்டியில் உள்ளோம் என்று கூறினேன். ஆனால் எனது கருத்தை திரித்துவிட்டனர். கர்நாடக தேர்தல் களத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இது தான் உண்மை நிலை. தேர்தலுக்கு பிறகு புதிய எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இறுதியாக முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்பதை கூறினேன்.

நிதி நிலை மோசம்

டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதில் கட்சி மேலிடத்திற்கு விருப்பம் இல்லை என்று நான் கூறவே இல்லை. பா.ஜனதா ஆட்சியில் அதிகளவில் ஊழல்களை செய்துள்ளனர். இத்தகைய மோசமான ஒரு ஆட்சியை நான் பார்த்தது இல்லை. ஏழை மக்களின் நலனுக்காக இந்த ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. பா.ஜனதா மக்களின் ஆதரவால் ஆட்சிக்கு வரவில்லை. ஆபரேஷன் தாமரை மூலம் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

கர்நாடகத்தின் நிதி நிலை மோசமாக உள்ளது. அதனால் மக்கள் இந்த பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய தயாராகிவிட்டனர்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story