60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்.. நாகாலாந்து, மேகாலயாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்.. நாகாலாந்து, மேகாலயாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x

நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நாளை ஒரே கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாகாலாந்து,

நாகலாந்தில் மொத்தம் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க உள்ளனர்.

60 தொகுதிகளுக்கு பாஜக, என்டிபிபி கட்சிகளை சேர்ந்த 183 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேபோன்று மேகாலயாவிலும் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

திடீரென ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 59 தொகுதிகளுக்கு 369 பேர் போட்டியிடுகின்றனர். இரு மாநிலங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story