சிவமொக்கா, சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை


சிவமொக்கா, சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா,சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 2½ கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின.

சிவமொக்கா-

சிவமொக்கா,சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 2½ கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின.

லோக் அயுக்தா சோதனை

சிவமொக்கா துங்கா அணையின் அரசு என்ஜினீயராக பிரசாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார் சென்றது. அதன் போில் லோக் அயுக்தா போலீசார் சிவமொக்காவில் உள்ள பிரசாந்த், அவரது சகோதரர், மற்றும் அவரது அப்பாவின் பத்ராவதியில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அதில் பிரசாந்த் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் ரொக்கம், 3½ கிலோ தங்க நகைகள், 24 கிலோ வெள்ளி பொருட்கள் 50 வெளிநாட்டு மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் பெங்களூருவில் 2 வீட்டு மனைகளும், 6 ஏக்கர் நிலமும் வாங்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

350 கிராம் தங்க நகைகள்

இதேபோல் சிகாரிப்புரா பஞ்சாயத்து ராஜ் என்ஜினீயராக சங்கர் நாயக் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார் சென்றது. அதன் போில் போலீசார் சிகாரிப்புராவில் உள்ள சங்கர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அவரது வீட்டில் இருந்து 350 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்களும் சிக்கின.மேலும் சங்கருக்கு சொந்தமான 3 வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.


Next Story