திருப்பதியில் லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு


திருப்பதியில் லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு
x

திருப்பதியில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சிலர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் காளஹஸ்தி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

திருப்பதியில் உள்ள மிட்டா கன்டிரிகா என்ற கிராமத்துக்கு அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய கார் எதிர் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story