40வது மாடியில் இருந்து அறுந்து விழுந்த லிப்ட் - 6 தொழிலாளர்கள் பலி


40வது மாடியில் இருந்து அறுந்து விழுந்த லிப்ட் - 6 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 11 Sept 2023 8:30 AM IST (Updated: 11 Sept 2023 12:07 PM IST)
t-max-icont-min-icon

40வது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பல்கும் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 40 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின் 40வது மாடியில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்றன. கட்டுமான பணிகளை முடித்துவிட்டு நேற்று மாலை பணியாளர்கள் 40வது மாடியில் இருந்து லிப்டில் கீழே இறங்கியுள்ளனர்.

அப்போது, லிப்டின் கம்பி அறுந்துள்ளது. இதனால், 40வது மாடியில் இருந்து லிப்ட் அசுர வேகத்தில் கீழே விழுந்தது. இந்த கோர விபத்தில் லிப்டில் இருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story