கர்நாடகத்தின் முதல் துணை முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா


கர்நாடகத்தின் முதல் துணை முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா
x

கர்நாடகத்தில் முதல்-துணை முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஆவார்.

பெங்களூரு:


கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்தனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்த போது முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி வகித்தார். அப்போது 3 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். அதாவது லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், கோவிந்த கார்ஜோள் ஆகிய 3 பேரும் துணை முதல்-மந்திரிகளாக இருந்தனர். பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆன பின்பு, துணை முதல்-மந்திரியாக யாரையும் நியமிக்கவில்லை.

இந்த நிலையில், கர்நாடகத்தில் முதன் முறையாக துணை முதல்-மந்திரி பதவி கிடைத்த பெருமை எஸ்.எம்.கிருஷ்ணாவை தான் சாரும். கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வீரப்ப மொய்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். அப்போது தான் முதன் முறையாக எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு இருந்தது. துணை முதல்-மந்திரிக்கு என்று தனியாக எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்றாலும், முதல்-மந்திரிக்கு அடுத்த துணை முதல்-மந்திரி பதவி கவுரவமாக பார்க்கப்படுகிறது.


Next Story