2023-ம் ஆண்டு இறுதிக்குள் சிறப்பு அதிகாரம் சட்டம் திரும்ப பெறப்படும்: அசாம் முதல்-மந்திரி பேச்சு


2023-ம் ஆண்டு இறுதிக்குள் சிறப்பு அதிகாரம் சட்டம் திரும்ப பெறப்படும்:  அசாம் முதல்-மந்திரி பேச்சு
x

அசாம் போலீஸ் படைக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளிப்போம் என முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தளபதிகளுக்கான மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, வருகிற நவம்பருக்குள் ஒட்டுமொத்த அசாம் மாநிலத்தில் இருந்தும் ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரம்) சட்டம் நீக்கப்படும்.

இதனால், மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு பதிலாக அசாம் போலீஸ் பட்டாலியன் செயல்படுவார்கள். எனினும், சட்டத்தின்படி மத்திய ஆயுத போலீஸ் படைகளும் இருப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டு இறுதிக்குள் அசாமில் இருந்து முழுமையாக, ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரம்) சட்டம் திரும்ப பெறுவதற்கான இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

அசாம் போலீஸ் படைக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். வடகிழக்கு பகுதியில் அமைந்த அசாமில் அரசு நிர்வாகம் வலுவாக இருக்கும்போது, அதற்கு சான்றாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


Next Story