மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை : இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி


மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை : இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி
x
தினத்தந்தி 15 July 2022 11:58 AM GMT (Updated: 15 July 2022 12:44 PM GMT)

மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

கொழும்பு,

திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகிறது. இதனால் கொதித்து போயிருக்கும் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக வெகுண்டெழுந்தனர்.

மக்களின் போராட்டத்துக்கு பணிந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் 9 ஆம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என பரவலாக செய்திகள் வெளியாகின. எனினும், மகிந்த ராஜபக்சே இலங்கையில் தான் தற்போது உள்ளார். அதேபோல், நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் இலங்கையில் இருக்கும் நிலையில், இருவரும் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட், மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அண்மையில் இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே, இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருக்கும் நிலையில், மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story