பீகாரில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு- ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதால் ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
பலராம்பூர்,
பீகார் மாநிலம் காதிகாம் மாவட்டம் பலராமபூர் பகுதியில் இன்று காலை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது இந்த ரெயில் மீது மர்ம மனிதர்கள் கற்களை வீசினார்கள். இதில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது.
அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story