விமானத்தில் திடீர் தீ; ஜன்னல் வழியே பார்த்து அச்சத்தில் உறைந்த பயணிகள்: அதிர்ச்சி வீடியோ


விமானத்தில் திடீர் தீ; ஜன்னல் வழியே பார்த்து அச்சத்தில் உறைந்த பயணிகள்:  அதிர்ச்சி வீடியோ
x

டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென பற்றிய தீயை ஜன்னல் வழியே பார்த்து பயணிகள் அச்சத்தில் உறைந்த அதிர்ச்சி வீடியோ வெளிவந்து உள்ளது.



புதுடெல்லி,


டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்ற 6ஈ-2131 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தின் இயந்திரத்தில் திடீரென்று இன்று தீப்பிடித்து கொண்டது. இதனை விமானத்தில் அமர்ந்து இருந்த பயணிகள் ஜன்னல் வழியே பார்த்து உறைந்து போனார்கள்.

இதனால், விமானம் தொடர்ந்து பறக்க முடியவில்லை. உடனடியாக டெல்லி விமான நிலையத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தின் இயந்திரத்தின் ஒரு பகுதி தொழில்நுட்ப கோளாறால் தீப்பிடித்து உள்ளது எனவிமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தின் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றிய காட்சியும், அதனை ஜன்னல் வழியே பார்த்து பயணிகள் அச்சத்தில் உறைந்த காட்சியும் அடங்கிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.



Next Story